Household income eligibility for solar panel (PV) and hot water rebates changed on 1 July 2026 from $210,000 to $150,000 per year. Applications submitted after 30 June 2026 will be assessed under the $150,000 eligibility cap.

சூரிய ஒளி வீடுகள் திட்டம் – Tamil

ஆற்றல் கட்டணங்கள் மீது சேமிக்கக்கூடிய தள்ளுபடிகள், தகுதி பெறுபவர்கள் யார் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி அறியுங்கள்.

சூரிய ஒளி வீடுகள் திட்டம் என்றால் என்ன

சூரிய ஒளி வீடுகள் திட்டம் என்பது விக்டோரியன் குடும்பங்கள் அவர்களது ஆற்றல் கட்டணங்கள் மீது சேமிக்கக்கூடிய தள்ளுபடிகள் மற்றும் வட்டியில்லா கடன்களை வழங்குகின்ற ஒரு விக்டோரியன் அரசு திட்டமாகும்.

நீங்கள் தகுதி பெற்றால், கீழ்கண்ட பொருட்களுக்கு செலுத்துவதற்கான பணத்தின் மீது (தள்ளுபடி) பெறலாம்:

  • ஒரு சூரிய பலகம் (solar panel (PV)) அமைப்பு மற்றும்/அல்லது
  • ஒரு ஆற்றல் திறன் மிக்க வெந்நீர் அமைப்பு.

சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி உங்களது மின் உபகரணங்களை இயக்குவது உங்கள் மின்கட்டங்களைக் குறைப்பதற்கு உதவுகிறது.

ஒரு எரிவாயு வெந்நீர் அமைப்பை ஒரு தரமான வெப்பக்குழாய் வெந்நீர் அமைப்பைக் கொண்டு மாற்றியமைப்பது கூட ஆற்றல் கட்டணங்களைக் குறைப்பதற்கு உதவுகிறது.

தள்ளுபடிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது

படிநிலை 1: உங்களது தகுதிநிலையைச் சரிபாருங்கள்

சூரியப் பலகம் (PV) தள்ளுபடி - $1,400 வரை

தகுதி பெறும் குடும்பங்கள் சூரிய பலகங்கள் (PV) நிறுவுவதற்கான செலவில் $1,400 வரையிலான ஒரு தள்ளுபடியைப் பெறுவார்கள். தற்போது கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கும் சூரிய பலகத்திற்கான (PV) தள்ளுபடி உண்டு.

அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வட்டியில்லா கடன்களும் கிடைக்கின்றன.

கீழ்கண்ட நிலைகளில் ஒரு சூரிய பலகத்திற்கான (PV) தள்ளுபடிக்கு நீங்கள் தகுதி பெறலாம்:

  • உங்களுக்குச் சொந்தமான மற்றும் ஏற்கனவே இருக்கும் ஒரு வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்கள் அல்லது, இந்த அமைப்பு நிறுவப்படக்கூடிய கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்
  • அனைத்து உரிமையாளர்களின் வரிக்குட்பட்ட ஆண்டிற்கான மொத்தக் குடும்ப வருமானம் $150,000-க்கும் குறைவாக உள்ளது
  • $3 மில்லியனுக்கும் குறைவான மதிப்பு கொண்ட சொத்து, அல்லது (கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு) முழுமை அடையும் போது $3 மில்லியனுக்கும் குறைவாக மதிப்பிடப்படும்
  • இந்த முகவரியில் உள்ள வீடு, சூரிய ஒளி வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு சூரிய பேனலுக்கான (PV) தள்ளுபடி அல்லது ஒரு சூரிய ஒளி மின்கலத்திற்கான தள்ளுபடியைப் பெற்றதில்லை
  • கடந்த 10 ஆண்டுகளில், ஒரு சூரிய பலகம் (PV) அமைப்பு அந்த வீட்டில் நிறுவப்படவில்லை.

வாடகை வீடுகளுக்கான சூரிய பலகம் (PV) தள்ளுபடி - $1,400 வரை

தகுதி பெறும் வாடகை வீட்டுக்கான உரிமையாளர்கள் சூரிய பலகம் (PV) நிறுவும் செலவில் ஒரு $1,400 வரையிலான ஒரு தள்ளுபடியைப் பெறலாம். இந்தத் தள்ளுபடியானது ஒவ்வொரு நிதியாண்டிலும் இரண்டு வாடகை வீடுகள் வரை கிடைக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வட்டியில்லா கடன்களும் கிடைக்கின்றன.

கீழ்கண்ட நிலைகளில் உங்களது வாடகை வீட்டிற்கான சூரிய பேனலுக்கான (PV) தள்ளுபடிக்கு நீங்கள் தகுதி பெறலாம்:

  • வாடகைக்கு குடியிருப்பவர்களின் வரிக்குட்பட்ட மொத்தக் குடும்ப வருமானம் ஆண்டிற்கு $150,000 கும் குறைவாக இருக்க வேண்டும்
  • தற்போதைய நிதியாண்டில் ஒரு வாடகை வீட்டிற்காக இரண்டு தள்ளுபடிகளுக்கும் அதிகமாக நீங்கள் பெறவில்லை
  • அந்த வீடு $3 மில்லியனுக்கும் குறைவாக மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும்
  • இந்த வீடு சூரிய ஒளி வீடுகள் திட்டத்தின் கீழ் சூரிய பலகத்திற்கான (PV) தள்ளுபடி அல்லது சூரிய ஒளி மின்கலத்திற்கான தள்ளுபடியைப் பெறவில்லை
  • கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு சூரிய பலகத்திற்கான (PV) அமைப்பு இந்த வீட்டில் நிறுவப்படவில்லை.
  • வாடகைக்கு விடுபவர் மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஒரு சூரிய ஒளி வீடுகள் திட்டத்திற்கான ஒப்பந்தம்
  • அந்த வீடு தற்போது வாடகைக்கு விடப்பட்டு, ஒரு வாடகைக்கான ஒப்பந்தம் சரியாக இருக்கிறது.

வெந்நீருக்கான தள்ளுபடி - $1,400 வரையிலான தள்ளுபடி (தகுதி பெறும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு)

அந்த வீடுகளில் வசிக்கும் தகுதி பெறும் குடும்பங்கள் கீழ்கண்ட ஒரு வெந்நீருக்கான தள்ளுபடியைப் பெறலாம்:

  • ஒரு வெப்பக் குழாய் அல்லது சூரிய ஒளி வெந்நீர் தயாரிப்பிற்காக $1,000 வரையிலான தள்ளுபடி அல்லது
  • உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தகுதி பெறும் வெந்நீர் தயாரிப்பிற்காக $1,400 வரையிலான தள்ளுபடி.

ஒரு விக்டோரியன் எனர்ஜி அப்கிரேடுகளுக்கான (VEU) வெந்நீர் தள்ளுபடியுடன் முன்பணத்திற்கான கட்டணங்களை நீங்கள் மேலும் குறைக்கலாம். உங்களது சில்லறை விற்பனையாளர் ஒரு VEU அங்கீகாரம் பெற்ற வழங்குநரா என்று கேளுங்கள்.

கீழ்கண்ட நிலைகளில் ஒரு வெந்நீர் வழங்கும் தயாரிப்பை அமைப்பதற்கான தள்ளுபடிக்கு நீங்கள் தகுதி பெறலாம்:

  • நீங்கள் இந்த அமைப்பு நிறுவப்படக்கூடிய, ஏற்கனவே உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் மற்றும் அதில் வசிப்பவர் என்றால்
  • அனைத்து உரிமையாளர்களின் வரிக்குட்பட்ட ஆண்டிற்கான மொத்தக் குடும்ப வருமானம் $150,000-க்கும் குறைவாக உள்ளது
  • அந்த வீடு $3 மில்லியனுக்கும் குறைவாக மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும்
  • இந்த முகவரியில் உள்ள வீடு ஏற்கனவே ஒரு வெந்நீர் வழங்கும் அமைப்பிற்கான தள்ளுபடி அல்லது சூரிய ஒளி வீடுகள் திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்கலம் அமைப்பதற்கான தள்ளுபடியைப் பெறவில்லை
  • மாற்றியமைக்கப்படும் வெந்நீர் அமைப்பை வாங்கி குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகின.

உங்களது வீடு இதற்கு முன்பு சூரிய ஒளி வீடுகள் திட்டத்திற்கான தள்ளுபடியைப் பெற்றுள்ளதா என்பதை அறிய, அழையுங்கள்:

  • வணிக நேரங்களில் 1300 376 393, அல்லது
  • 131 450 என்ற எண்ணில் இலவச தேசிய அளவிலான மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்பாளர் சேவையை அழைத்திடுங்கள்.

படிநிலை 2: ஒரு உத்தேசமான விலையைப் பெறுங்கள்

ஒரு சோலார் விக்டோரியா அங்கீகாரம் பெற்ற சில்லறை வணிகரைத் தொடர்பு கொண்டு ஒரு சூரிய ஒளி வீடுகள் திட்டத்திற்கான தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுங்கள். அங்கீகாரம் பெற்ற வணிகரை அறிக எனும் டேப்-ல் அவர்களது விவரங்களை பற்றி அறியுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் தயாரிப்பு சோலார் விக்டோரியா தயாரிப்புகளுக்கான பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

உங்களது வீடு கட்டுமானத்தின் கீழ் இருந்தால், இது பற்றி திட்டமிடும் கட்டத்திலேயே உங்களது கட்டிட கலைஞரிடம் பேசுங்கள். கட்டுமானத்தின் போதே நிறுவுவதற்கு உங்கள் கட்டிட கலைஞரின் ஒப்புதல் தேவைப்படலாம்.

ஒரு வெந்நீர் அமைப்பிற்கான தோராயமான விலையைப் பெறுகிறீர்கள் என்றால், அந்த வணிகர் விக்டோரியன் எனர்ஜி அப்கிரேட் (VEU) திட்டத்திலும் பதிவு செய்திருப்பதை உறுதி செய்து, ஒரு VEU வெந்நீர் அமைப்பிற்கான தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம்.

படிநிலை 3: உங்களது தள்ளுபடிக்கு விண்ணப்பியுங்கள்

ஒரு அங்கீகாரம் பெற்ற வணிகரிடம் இருந்து ஒரு தோராயமான விலையை நீங்கள் பெற்றவுடன், விக்டோரியா வாடிக்கையாளர் சேவை மையத் தளத்தில் விண்ணப்பிப்பதற்கான ஒரு இணைப்பைப் நீங்கள் பெறுவீர்கள். உங்களது சில்லறை விற்பனையாளர் பின்வருபவரைச் செய்வார்:

  • உங்களது சார்பாக தள்ளுபடி அல்லது கடன் தொகையைப் பெறுவார், மேலும்
  • உங்களது அமைப்பு மற்றும் நிறுவுவதற்கான மொத்தக் கட்டணத்தில் இருந்து அந்தத் தொகையைக் கழிப்பார்.

நிறுவுதல் செய்யப்பட்ட பின் மீதமுள்ள தொகையை நீங்கள் சில்லறை விற்பனையாளருக்குச் செலுத்துவீர்கள்.

எங்களது விண்ணப்பப் பக்கத்தில் மேலும் விவரங்களைப் பெறுங்கள்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

உங்களது தாய்மொழியில் பேச, 131 450 என்ற எண்ணில் இலவச தேசிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பு சேவையை அழையுங்கள்.

ஆங்கிலத்தில் பேச, திங்கள் முதல் வெள்ளி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து), காலை 9 முதல் மாலை 5 மணி வரை, 1300 376 393 என்ற எண்ணை அழையுங்கள்.

பிற தொடர்பு விருப்பங்களுக்கு, எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆற்றலைச் சேமிப்பதற்கான பிற உதவி

உங்களது ஆற்றல் கட்டணங்கள் மீது சேமிக்க உதவக்கூடிய பிற அரசுத் திட்டங்கள்:

Updated